காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

இன்றைய திருக்குறள்*

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
 சொல்லேர் உழவர் பகை.

*மு.வ உரை*:
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

*கருணாநிதி  உரை*:
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
*சாலமன் பாப்பையா உரை*:
விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

விவசாயம் என்பது வியாபாரம் அல்ல.
அது ஒரு வாழ்க்கை முறை.

- நம்மாழ்வார்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த
 மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?

*திருநெல்வேலி*

2. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?

*டேகார்டு*

3. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?

*ஸ்ரீவில்லிபுத்தூர்*

4. ராகங்கள் மொத்தம் எத்தனை?

*16*

5. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?

*குடை*

☘🍀🌿☘🍀🌿☘🍀

*உடல் நலம்*

உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words*

 Rabbit முயல்

 Ram செம்மறியாட்டுக் கடா

 Rat எலி

 Reindeer கலைமான்

 Rhinoceros காண்டாமிருகம்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)*:
 "சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன.

after

although

as long as

as soon as

even though

before

if

how

since

than

that

when

where

whether

while

whenever

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.

I will get experience if I do a job.

Although he is small, he is very strong.

I will be able to buy a car when I get older.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*வினாக்குறி (?)*

வினாப் பொருளைத்தரும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி     இடல்வேண்டும்.

*வியப்புக்குறி (!)*

வியப்பு, அவலம் முதலான உணர்ச்சிகளைக் காட்டுகின்ற வாக்கியங்களுக்குப்    பின்னும், வரவேற்றல், வாழ்த்தல், வைதல் ஆகிய பொருள்களைத்     தெரிவிக்கின்ற வாக்கியங்களுக்குப் பின்னும் வியப்புக் குறி இடவேண்டும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *புதிர் கதை*

மந்திரவாதி
  திருப்பூர் என்னும் ஊரில் உதயசங்கர் என்ற பெருஞ் செல்வந்தர் இருந்தார். அவருடைய மாளிகையில் நம்பிக்கைக்கு உரிய வேலையாட்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்கள் பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்து வந்தனர்.

  அந்தச் செல்வந்தரின் விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்றுஇ திடீரென்று காணாமல் போய் விட்டது. வெளியே இருந்து வந்து யாரும் திருடி யிருக்க முடியாது. வேலையாட்களில் எவனோ ஒருவன்தான் திருடியிருக்க வேண்டும். எல்லா வேலையாட்களையும் விசாரணை செய்தால் நேர்மையான வேலையாட்கள் வருந்துவார்களே... உண்மையான திருடனையும் கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்களும் உள்ளம் வருந்தக்கூடாது. என்ன செய்வது என்று சிந்தித்தார் உதயசங்கர்.

  புகழ் பெற்ற மந்திரவாதி ஒருவரிடம் சென்று நீங்கள்தான் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு எந்தத் துன்பமும் வரக் கூடாது என்றார். உங்கள் மாளிகையில் மந்திர பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து பூஜை செய்கிறேன். பூஜை முடிந்ததும் திருடன் யார் என்பதைக் காட்டுகிறேன் என்றார் மந்திரவாதி. அதன்படியே பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார் உதயசங்கர்.

  மந்திரவாதி வந்தார். பூஜை தொடங்கியது. ஓம்! சூ! மந்திரக்காளி என்று மந்திரங்களை உரத்த குரலில் சொன்னார். வேலையாட்கள் நால்வரையும் அழைத்தார். பூஜையிலிருந்து அரிசிப் பொரி தட்டை எடுத்தார். அதில் நான்கு வண்ணங்களில் அரிசிப் பொறி இருந்தது. முதலாமவனிடம் மஞ்சள் நிற பொரியும்இ இரண்டாமவனிடம் சிவப்பு நிற பொரியும்இ மூன்றாமவனிடம் வெள்ளை நிற பொரியும்இ நான்காமவனிடம் பச்சை நிற பொரியும் தரப்பட்டது.

  இது சாதாரண பொரி அல்ல. மந்திரப் பொரி. இதை வாயிலேயே நன்றாக மெல்ல வேண்டும். விழுங்கக் கூடாது. நன்றாக மெல்லப்பட்டதும் இந்த மந்திரப் பொரி திருடனின் வாயில் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.

  அவனால் வாயைத் திறந்து பேசமுடியாது. திருடாதவர்களைப் பொரி ஒன்றும் செய்யாது. இந்தப் பொரியை நன்றாக மென்றுவிட்டு வெளியே சென்று துப்பிவிட்டு வர வேண்டும் என்றார் மந்திரவாதி.

  நடுங்கியபடியே அவர்கள் நால்வரும் பொரியை மென்றனர். வெளியே சென்று துப்பிவிட்டு வந்தனர். அவர்களில் ஒருவனைத் திருடன் என்று கண்டு பிடித்துச் சொன்னார் மந்திரவாதி. அவனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான். திருடனை மந்திரவாதி எப்படிக் கண்டுபிடித்திருப்பார்?

புதிருக்கான விடை:
  வேலையாட்கள் பொரியைத் துப்பிய இடத்தைப் பார்த்தார் மந்திரவாதி. அவர்களில் ஒருவன் மட்டும் பொரியை மெல்லாமல் அப்படியே துப்பி இருந்தான். எந்த நிறப் பொரி என்பதை வைத்து திருடனைக் கண்டுபிடித்தார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮 5000 கோடி செலவில் சென்னையில் இரு மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

🔮பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

🔮சென்னையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 35 புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி அறிவிப்பு.

🔮மும்பையில் அதிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

🔮 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஏழாவது முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

🍀☘🌿🍀☘🌿🍀☘

*தொகுப்பு*

T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H