விண்வெளி துறையில் புதிய உச்சம் தொட்ட இந்தியா 🇮🇳 🚀..... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விண்வெளி துறையில் புதிய உச்சம் தொட்ட இந்தியா 🇮🇳 🚀.....

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
விண்வெளியில் செலுத்திய அடுத்த 16" வது நிமிடத்தில் புவியின் நீள் வட்ட சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது இதனால் விஞ்ஞானிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிட்டித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும்.இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.

2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது.

150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.

நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இன்று திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பியது, ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது.

உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும்.

ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.

நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன்.

இப்படி விண்வெளி சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நான்காவது நாடாக இந்தியா செய்துள்ளது என்பது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய ஒரு விஷயம் ஆகும்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H