
விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் 'ஹீரோ' எனவும், இன்ஜீன் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன. பயணி ஒருவர் கூறுகையில், விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என்றார்.
#செய்திக்கதிர் (The Seithikathir) வாட்ஸ்அப் குழுவில் இணைய, ADD ME SK என டைப் செய்து, +919842940657 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
Subscribe Our Seithikathir YouTube Channel:- https://www.youtube.com/channel/UCnvw9SJsp-XybJwRYk5MOmA