அது எந்த கற்கைநெறியாலும் பூரணமடைய முடியாதது..
பிறர் மீதான நம் அளவுகோள் என்பது நமது விழிகளால் நிச்சயம் தீர்மானிக்க முடியாததும் கூட..
வாழ்க்கை இறை நம்பிக்கை எனும் புள்ளியிலிருந்து ஆழமாகப் செப்பனிடப்பட வேண்டியது..
பிறரின் வாழ்தல் என்பது நம் கோணத்திலிருந்து பார்க்கப்படுதலுக்கு அப்பாற்பட்டது..
அறிவுக்கும் நடைமுறைக்கும் முரண்பாடுகள் இருக்குமானால் நிச்சயம் அந்த நகர்வில் ஏதோ குறையிருக்கக் கூடும்..
நிஜங்களை விட கனவுகள்
வீரியம் கூடியது..
எதிர்பார்ப்புக்களால் மட்டுமே எல்லை தாண்ட முடிகிறது..
அதனால் தான் நிஜங்களின் இழப்புக்களை இயல்பாய் ஏற்க முடிந்ததைப் போல்
கனவுகள் கலைதலை அத்தனை இலகுவாய் கடக்க முடிவதில்லை..
நிச்சயம் இந்த உலகில் மனிதர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது..
நடத்தை மாற்றங்கள்
சிந்தனைத் தெளிவிலிருந்து வரும் போதே சாத்தியமாகிறது..
வெறும் உணர்ச்சி ததும்பும் கண்ணீரால் எதுவும் மாறி விடப் போவதில்லை..
சில போது அறிவைத் தாண்டி உணர்வுகள் வெற்றி பெறுவதையும் தடுக்க முடிவதில்லை..
வாழ்க்கை வினோதமானது தான்
இது தான் வாழ்க்கை என்று
யாருக்கும் வரையறை செய்ய முடியாது..
மனிதர்கள் ஆச்சரியமானவர்கள்..
இயல்புகளால் வேறுபாடு கொண்டவர்கள்..
இறைவனைச் சார்ந்து நிற்கும் அடிப்படையால் மட்டுமே அவர்களால் ஒன்று பட முடியும்..