தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள்
www.trb.tn.nic.in
என்ற இணைய தளத்தில்
04.09.2019 அன்று காலை முதல்
24.09.2019 அன்று மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்கலாம்.
NET or SLET or SET or SLST or CSIR or JRF தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது Ph.D. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
பொதுப்பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள்
முதுகலை பாடத்தில் 49.99 சதவீதம் பெற்றால் கூட தகுதி கிடையாது.
முழுமையாக 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் மட்டும் முழுமையாக 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேலும்
UG
PG
M.Phil.
Ph.D.
போன்ற பட்டங்ககளை கல்லூரிக்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து பட்டங்களும் 28.08.2019 க்கு முன்பாகவே பெற்றிருக்க வேண்டும்.
தொலைதூர கல்வி மூலம் அல்லது முறையான கல்வி பெறாமல் திறந்த நிலை பல்கலை மூலம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
தேர்வு கட்டணம்
Rs. 600 for General / BC / MBC
Rs. 300 for SC / ST / PwD
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
மொத்தம் 34 மதிபெண்களுக்கு வரிசை படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
அனுபவத்திற்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் (ஒரு வருடத்திற்கு 2 மதிப்பெண்கள்)
கல்வி தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள்
Ph.D. க்கு 9 மதிப்பெண்கள்
PG with M.Phil and SLET or NET க்கு 6 மதிப்பெண்கள்
PG without M.Phil. and SET or NET க்கு 5 மதிப்பெண்கள்
நேர்முக தேர்விற்கு 10 மதிப்பெண்கள்
ஆக மொத்தம்
அதிகபட்சமாக
15 + 9 + 10 = 34 மதிப்பெண்கள்
மேற்கண்ட வகையில் 34 க்கு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
மாத சம்பளம்
அடிப்படை ஊதியம்
57,700
Plus
DA 12 % on 57700
Plus
HRA
3200
Plus
MA
300
Total
Rs. 68,120
விண்ணப்பிக்கும் பொழுது
Photo (JPEG format, 20 to 60 kb)
Sign (JPEG format, 10 to 30 kb)
E-Mail ID
Mobile Number
இவை அனைத்தும் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும்.
மேலும்
விண்ணப்பிக்கும் பொழுது
அனைத்து சான்றிதழ்களும் JPEG வடிவில்
60 to 120 kb அளவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள்....
1.
SSLC Marksheet
2.
+2 Marksheet
3.
UG Degree Certificate
4.
PG Degree Certificate
5.
PG Consolidated Marksheet
6.
NET or SET Certificate
7.
M.Phill Certificate
8.
Ph.D. Certificate
9.
Experience Certificate
10.
Community Certificate
11.
Proof for claiming Tamil Medium Reservation (அனைத்து படிப்பும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும்)
மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களும் தனித்தனியாக JPEG வடிவில் ஸ்கேன் செய்யப்பட்டு
ஒவ்வொன்றும் 60 to 120 kb அளவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அனுபவ சான்றிதழ்கள்
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் தனித்தனியாக
முறையான படிவம் 1 ல் பூர்த்தி செய்து அந்தந்த மண்டல JD அலுவலகம் மூலம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.








