இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,' அனைத்து பள்ளிகளிலும் 5
மற்றும் 8-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டுமேன மத்திய அரசு
அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் திறனை
மேம்படுத்த இது கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மூன்றாண்டு காலம்
இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மூன்றாண்டு காலத்திற்கு 5 மற்றும்
8-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம். ஆனால்
மூன்றாண்டுகளுக்கு பின்னர் இருந்துதான் யார் தேர்ச்சி பெறுகிறார்கள்..?
பெறவில்லை என்ற விவரங்கள் பட்டியலிப்படும்.
ஒன்றிலிருந்து 8 வரை படித்துவிட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு
செல்லும் போது மாணவர்களால் மத்திய அரசின் பொதுத் தேர்வுகளை சந்திக்க
முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே 5 மற்றும் 8-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு
கொண்டுவரப்படும் போது மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு இருக்கிறது என்பதை
அறிந்து கொள்ள முடியும். தமிழக அரசை பொறுத்தவரை மூன்றாண்டு காலம்
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு காலத்திற்கு பின் இது
முழுமையாக அமல்படுத்தப்படும்.
இந்த தேர்வு முறைகளால் மாணவர்களின் இடை நிற்றலுக்கு வாய்ப்பே இல்லை. இன்று
கல்வியாளராக இருக்கும் அத்தனை பேருக்கும் ஒன்றிலிருந்து எட்டு வரை அத்தனை
வருடங்களும் பொதுத்தேர்வு நடைபெற்றிருக்கிறது. அதனை எழுதித்தான் அத்தனை
பேரும் வந்திருக்கிறார்கள். இப்போது 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத்தேர்வு
வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுவரை மூன்றாண்டுகளுக்கு நாங்கள்
விதிவிலக்கு அளிக்கிறோம். மூன்றாண்டு வரையிலும் மாணவர்களின் கல்வித் திறனை
படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது' எனத்
தெரிவித்துள்ளார்