இதன் பேட்டரியை தனியாக கழற்றி 'சார்ஜ்' செய்யலாம். முழுமையாக 'சார்ஜ்' செய்ய 2-3 மணி நேரம் தேவைப்படும். மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன.
எகானமி மோடில் அதிகபட்சமாக மணிக்கு 30-35 கி.மீ., ஸ்போர்ட்ஸ் மோடில் 50-60 கி.மீ., மற்றும் டர்போ மோடில் 65-70 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.
முழு சார்ஜில், எகானமி மோடில் 110 கி.மீ., துாரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் 88 கி.மீ., வரை பயணிக்கலாம். ஒரு கிலோ மீட்டருக்கு 20 காசு தான் செலவாகும் என்கின்றனர்.
இந்த ஸ்கூட்டரில் ஒரு கிலோவாட் பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் உள்ளது. 2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து, மோட்டாருக்கான மின் திறன் அளிக்கப்படுகிறது. மின் மோட்டார் அதிகபட்சமாக 2.5 கிலோவாட் திறனை வழங்கும். அலைபேசி சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெப்ட் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங்கில் ஸ்கூட்டரை கண்டறியும் வசதி போன்றவை சிறப்பம்சம். விலை ரூ.71,990/-