இதுதொடர்பாக திங்களன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதேபோல குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்
வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முதனிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








