சனி கிரகத்தின் பெயர் நாம் நினைப்பது போல சனீஸ்வரன் என்பதல்ல. சனிகிரகத்தின் அசல் பெயர் சனைச் சர என்பதே ஆகும். தமிழில் இதன் அர்த்தம் மெதுவாக செல்பவன்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரேபியர்களும்,இந்தியர்களும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள். நட்சத்திரங்கள் இடம் பெயர்வதில்லை. கிரகங்கள் மட்டுமே நகரந்து இடம் பெயருகின்றன,என அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் கண்ணுக்கு தெரிந்த கிரகங்கள், புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் மட்டுமே

அவ்வாறு அறியப்பட்ட ஐந்து கிரகங்களில் சனி மட்டுமே மற்ற எல்லா கிரகங்களை விட சூரியனை மெதுவாக சுற்றியது. அதாவது சூரியனை சுற்றிவர அதிக காலத்தை எடுத்துக் கொண்டது.சுமார் 29.5 ஆண்டுகள்
ஆகவே அதற்கு சமஸ்கிருத மொழியில் காரணப்பெயராக சனைச் சர என பெயரிட்டனர். சனை என்றால் மெதுவாக என்று பொருள். சர என்றால் செல்பவன் என்று பொருள்.காலப்போக்கில் சனைச் சர என்பது சனீஸ்வரன் என மாறிவிட்டது.
சனி கிரகத்தின் வளையங்கள் என்பது ஒரு தோற்றமே. பெரிய பாறைகளும், கற்களும் ,ஐஸ் கட்டிகளும் அதன் வயிற்றுப் பகுதிக்கு மேலாக ரசமட்டம் வைத்து அடுக்கியது போல,அடுத்தடுத்து சுற்றி வருகின்றன.
இவற்றின் எண்ணிக்கை கோடி கணக்கில் இருக்கும்
நாம் தொலைவில் இருந்து பார்க்கும் போது அவை வளையங்களாக நமக்கு காட்சி அளிக்கின்றன.
இந்த வளையங்கள் மட்டும் இல்லாமல் 46 சந்திரன்களும் சனியை சுற்றி வருகின்றன.
தற்போது புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நெப்டியூன் கிரகம் மட்டும் (புளூட்டோ கி்ரக லிஸ்ட்டில் தற்போது இல்லை) சனியை விட மிக மெதுவாக செல்கின்றது.
அதாவது சூரியனை சுற்றி வர 164 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.
இந்த கிரகம் முன்னமே நம் முன்னோர்களுக்கு தெரிந்திருந்தால், இந்த நெட்டியூன் தான் சனைச் சர ஆகியிருக்கும்.
அதாவது சனீஸ்வரன் ஆகியிருக்கும்
நன்றி! வணக்கம்!