பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம்
செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும்.
இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப்
பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
எப்போதும் குளிர்ச்சியாக தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரை
சேமித்து வைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு, நீரை இயற்கையாகச்
சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு.
மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம்
வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும்
மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த 'வாட்டர்
பில்டர்'.







