யானைக்கு எது சிறப்பு தும்பிக்கையா? செவியா?பலமா? கால்களா? அல்லது தந்தமா? நிச்சயமாக தந்தம் தான். அது எப்படி விலைமதிக்க முடியாத பொருட்களில் ஒன்று தந்தம். அதை முறித்து வியாசர் மகாபாரதம் சொல்ல கணபதி எழுதினார் என்று கதை சொல்லுகிறது.
ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்காக செலவு செய்கிறது. இவற்றின் செரிமானத் திறன் மிக மந்தமானது. உண்பதில் 40 விழுக்காடு மட்டுமே செரிமானம் ஆகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை உட்கொள்ள வேண்டி இருக்கிறது. வளர்ந்த யானை ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ எடையுள்ள உணவு உட்கொள்கிறது.
யானையின் துதிக்கை மிக விசேஷமானது. மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்த துதிக் கையினால் பெரும் மரக்கிளைகளை ஒடிக்கவும் உடைக்க முடியும். பெரும் சுமைகளையும் தனது துதிக்கையால் தூக்கி செல்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் தனது துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.
யானையின் தந்தங்களுக்கு யானைக் கோடு என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சி ஆகும்.