அரசு ஊழியர்கள் ஓய்வுகால பலன்களை தாமதமின்றி பெற ‘நிலுவை இல்லை’ சான்று வழங்க புதிய நடைமுறை : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 18 January 2020

அரசு ஊழியர்கள் ஓய்வுகால பலன்களை தாமதமின்றி பெற ‘நிலுவை இல்லை’ சான்று வழங்க புதிய நடைமுறை :

அரசு ஊழியர்கள் ஓய்வுகால பலன்களை தாமதமின்றி பெற ‘நிலுவை இல்லை’ சான்று வழங்க புதிய நடைமுறை 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுகால பலன்களை காலதாமத மின்றி பெறும் வகையில், ‘நிலுவை இல்லை ’ சான்று வழங்குவதற்கான புதிய நடைமுறையை பணியா ளர் நலத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பணியாளர்களுக்கான அடிப் படைச் சட்டத்தின்படி, அரசுப் பணி யில் இருக்கும் ஒருவர் ஓய்வு பெற்றாலோ, கட்டாய ஓய்வு அளிக் கப்பட்டாலோ, விருப்ப ஓய்வு பெற் றாலோ, உரிய காலக்கெடுவுக்குள் அவருக்கான பணிக்கொடை உள் ளிட்ட ஓய்வுகாலப் பயன்கள் விடு விக்கப்பட வேண்டும்.
இதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர் மீது எவ் வித ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ‘நிலுவை இல்லை ’ என்பதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து கருவூலத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது இந்த நடைமுறையை தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை எளிதாக்கியுள்ளது. குறிப்பாக, தற்போது தமிழக அரசில் ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு முறை உரு வாக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்தது முதலான அனைத்து விவரங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு முறைக்கான தரவுதளத்தில், புதிய வடிவில் நிலுவை இல்லை என்ப தற்கான சான்றினை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பொதுவான சான்றிதழ் வடிவத்தையும் பணியாளர் நலத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது: தமிழக அரசில் 36 துறைகள் உள்ளன. 
இந்த துறைகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக் கானவர்கள் ஓய்வு பெறும் நிலை யில், அவர்களுக்கான நிலுவை இல்லை சான்றிதழ் துறைகள் வாரியாக வெவ்வேறு வடிவத் தில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் காலதாமதம், குழப்பத்தை போக்கவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. 
 இதன்மூலம், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பின் வாயிலாக சான்றிதழ் வழங்க முடியும். அந்த சான்றிதழ் உடனடியாக கருவூலத் துறைக்கு சென்று, விரைவில் செயல்பாடு கள் தொடங்கும். இந்த நடை முறையால், ஓய்வு பெறுபவர்கள் பணிக்கொடை உள்ளிட்ட சலுகை களைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Google Translation

New Procedure to Receive No Employee Certificate for Retirement of Government Employees

The Employees Welfare Department has introduced a new procedure for providing government employees and teachers retirement benefits without delay. 

According to the Employees' Service Act, a retirement, compulsory retirement, or optional retirement of a public servant must be granted the pension benefits that are paid to him within the appropriate time frame. A certificate of non-compliance must be sent from the relevant department to the Treasury Department under various sections, including that no disciplinary action has been taken against the employee involved. 

At present, this process has been facilitated by the Department of Personnel Welfare and Administrative Reforms. In particular, the state of Tamil Nadu has an integrated financial and human resource development system. With this, the record of public servants and teachers has been fully digitized. 

All the details of the work have been uploaded. Therefore, in the Database for Integrated Finance and Human Resources Development System, a new form of pending evidence has been introduced. The Department of Personnel Welfare has also issued a general certification form. Commenting on this, General Secretary of the Union Peter Antonisamy said: 

There are 36 departments in the State of Tamil Nadu. Thousands of retirees are retiring from these fields annually, and they have no certification certificates issued in different forms. This new system has been introduced to alleviate the delay and confusion. Through this, the relevant departments can be certified through the Integrated Financial and Human Resources Management System. 


The certificate will immediately go to the Treasury Department and soon the activity will begin. With this method, retirees do not have to wait for rewards, including paychecks. He said so.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H