அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் பாடவேளை நேரங்களில் மாற்றம் கொண்டுவர
கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் இயங்கு கின்றன. இதில் 70 சதவீத
கல்லூரி களில் காலை, மாலை என இரு பணி நேரமுறையில் (ஷிப்ட்) வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இதில் காலை வகுப்புகள் காலை 8.45 முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை
வகுப்புகள் மதி யம் 1.30 முதல் மாலை 6 மணி வரை யும் நடைபெறுகின்றன. காலை
நேர வகுப்பில் நிரந்தர பேராசிரி யர்களும், மாலை நேர வகுப்பில் கவுரவ
விரிவுரையாளர்களும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் அரசுக் கல்லூரி களில் உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றிவிட்டு,
காலை 10 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்த உயர்கல்வித் துறை
திட்டமிட்டுள் ளது.
மாணவர்களுக்கு கல்வி கற்க போதுமான நேரமின்மை மற்றும் மாலைநேர வகுப்புகளில்
குறைவான மாணவர்களே படித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து புதிய பணி நடைமுறைக்கேற்ப தேவைப் படும் கூடுதல் வகுப்பறைகள்,
ஆசிரியர்கள் போன்ற உட்கட்ட மைப்பு வசதிகளின் விவரங்களை விரைவாக அனுப்பி
வைக்க அனைத்து அரசுக் கல்லூரி முதல் வர்களுக்கும் சுற்றறிக்கை வாயி லாக
கல்லூரிக் கல்வி இயக்குநர கம் அறிவுறுத்தியுள்ளது.