2.கடந்த ஐந்து வருடமும் இயேசுகிறிஸ்து காட்டிய வழியாக நாங்கள் ஆட்சிசெய்ய முயற்சி செய்தோம்.
3 இயேசுகிறிஸ்து தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் ஏழைகளுக்கு சேவை செய்தார்.
4. அவருடைய வாழ்க்கையைக் குறித்து நான் எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.
5. அவர்மூலமாய் நாம் அநேக சம்பவங்கள் பார்க்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது, வேதத்தில் வாசிக்க முடிகிறது.
6. எப்படிப்பட்ட வியாதி உள்ளவர்களாயிருந்தாலும் அவர் அந்த வியாதிகளை அவர்களை விட்டு விலக்கினார். பலதரப்பட்ட வியாதியுள்ளவர்களையும் அவர் குணமாக்கினார்.
7. நாங்களும் இந்த டெல்லி பட்டணத்தில் பல இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து உள்ளோம், ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி.
8. ஏழைகளுக்கு சிகிச்சை செய்யும்படி அரசு மருத்துவமனைகள் ஏற்படுத்தி உள்ளோம். அநேக புதிய அரசு மருத்துவமனைகள் திறந்து உள்ளோம். அவர்கள் எல்லாருக்கும் இலவச சிகிச்சை அறிவித்துள்ளோம். ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல பள்ளிகளை உருவாக்கி இருக்கிறோம். நல்ல கல்வி கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
8. நாங்கள் முழு முயற்சியாக இதைத்தான் செய்கிறோம். இயேசுகிறிஸ்து அவர் தன்னுடைய வாழ்வின் மூலம் என்ன நற்செய்தியைச் சொன்னாரோ அதை. நாங்கள் மிகவும் சிறியவர்கள், சாதாரணமானவர்கள்.
9. அவர் சொன்ன வழிகளில் நாம் ஒரு சதவீதமாவது கடைபிடிப்போமானால் நாம் பாக்கியவான்களாய் இருப்போம் நான் நினைக்கிறேன். முக்கியமான நற்செய்தி அவருடைய வாழ்க்கையைக் குறித்துதான்.
10. உங்களுக்கு விரோதமாக யார் அநியாயம் செய்தாலும், யார் எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும்.
11. இயேசுகிறிஸ்து தாம் மரணத்தின் முடிவில் இருக்கும்போது கூட அவரை சித்திரவதை செய்தவர்களை, அவரை துன்பப்படுத்தினவர்களை அவர் மன்னித்தார். எவர்கள் அவரை நிந்தித்தார்களோ, அவமானப்படுத்தினார்களோ அவர்களை மன்னித்தார்.
12. நான் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலயம் சென்றிருந்தேன். அங்கு சென்றபிறகு ஒன்று சிந்தித்தேன். நமக்கு விரோதமாக யாராவது தவறு செய்துவிட்டால், நம் மனதில் வருவதெல்லாம் அவனுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று. சரிதானே, அப்படிதானே தோன்றும். நமக்குக் கொஞ்சம் அதிகாரம் இருந்தால்போதும், அந்த மனுஷனை என்ன வேண்டுமானாலும் செய்வோம். இது மனிதனுடைய இயல்பு.
13. நமக்கு விரோதமாக இருப்பவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை நாம் பழிவாங்க நினைப்போம். இது சரி அல்ல. இதனால் சமுதாயம் வளராது, மனிதநேயமும் வளராது. இயேசுகிறிஸ்து மரிக்கும்போது சொன்ன இந்த நற்செய்திதான் பெரிய நற்செய்தி என்று நான் நினைக்கிறேன்.
14. உங்களுக்கு எப்படிப்பட்ட எதிரிகள் இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். மன்னிப்புதான் மனிதனுடைய குணாதிசயம்! ஆமென்!








