இன்றைய ராசி பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
மேஷம்☀️
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய
சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்☀️
இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள்
வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக
செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.
மிதுனம்☀️
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி
நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில்
உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில்
இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்☀️
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும்
முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 வரை
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்
இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்☀️
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள்
ராசிக்கு பகல் 12.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூரபயணங்களை
தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக நடந்து கொள்வதன்
மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கன்னி☀️
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய
நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
துலாம்☀️
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள்
ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
விருச்சிகம்☀️
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய
காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு☀️
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர
பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள்
விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
மகரம்☀️
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்.
தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும்
முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள்
மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்☀️
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்☀️
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்
நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள்
அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.