தங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய
வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய
ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ரூ
5,41,08,00,00,000!
இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோகம் வரக்காரணம் மூன்று - தங்கம்
அந்தஸ்த்தை பறைசாற்றுகிறது, அணிபவரை ஆடம்பரமாய் மிடுக்காய்க் காட்டுகிறது
முக்கியமாக தங்கத்தை ஒரு அவசரகால சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
2008 இல் உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியபோது, இந்தியர்கள்
அந்த நெருக்கடியை அவ்வளவாக உணரவில்லை, காரணம் நடுத்தர வர்க்கத்தின்
சேமிப்பு, இதில் தங்கத்துக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.
நம்பிக்கையான நகைக்கடையில் 916 ஹால் மார்க் நகைகளை வாங்குவதையே இந்திய தர
நிர்ணய ஆணையம் (BIS) வலியுறுத்துகிறது. தூய தங்கத்தை வைத்து நகைகள் செய்ய
முடியாது, தங்கத்தோடு செம்பு போன்ற உலோகம் கலந்தே நகைகள்
தயாரிக்கப்படுகின்றன.
இதில் 916 ஹால் மார்க் என்பது நகையில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்பதைக்
குறிக்கிறது. மீதி 8.4 சதவீதம் வேறு உலோகமாக இருக்கும், பெருவாரியான
கடைகளில் இப்போதெல்லாம் இந்த 916 நகைகளே விற்கப்படுகின்றன. அதனால் நகை
வாங்கயில், இந்த முத்திரை உள்ளதா, அன்றைய நாளில் 916 தங்கத்தின் மதிப்பு
என்ன எனத்தெரிந்தே நகையை வாங்கவேண்டும்! இதனால் ஏமாறாமல் இருக்கலாம்