மேலும், ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை இல்லாமல் இப்படிப்புகளில் படிக்கவும் கேட் தேர்ச்சியை எதிர்பார்க்கின்றன. கேட் நுழைவுத்தேர்வை பெங்க ளூரு இந்திய அறிவியல் நிறு வனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.மொத்தம் 100 மதிப்பெண்ணைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக் கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி கேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப்பிரிவுகளில் நடத்தப் படுகிறது.
அந்த வகையில், 2020-2021-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான கேட் நுழைவுத்தேர்வு கடந்த பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. டெல்லி ஐஐடி நடத்திய இத்தேர்வை அகில இந்திய அளவில் 6 லட்சத்து 85 ஆயிரத்து 88 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் மார்ச் 16 -ம் தேதி வெளியிடப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு 3 நாட்கள் முன்னதாகவே நேற்று தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டன. தேர்வு எழுதியவர் களில் 18.8 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்றிருப்பதாக டெல்லி ஐஐடி அறிவித்துள்ளது.








