ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருப்பதாக முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் அறிவித்துள்ளார்.
அனைத்து மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன .
சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
லாக் அவுட் காலத்தில் உணவுக்கும் மருந்துகள் போன்ற அவசிய தேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் இரண்டு மாத ரேசன் பொருட்கள் முன்கூட்டியே இலவசமாக வழங்கப்படும் என்றும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.







