➖➖➖➖➖➖➖
மனித எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும் எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொடுக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் எப்பொழுதுமே நல்லதையே நினைக்கச் சொன்னார்கள்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிரோம் என்பது உண்மை. நாம் பணக்காரராக வேண்டும் என்று முழு மனதோடு நினைத்தால் ஒரு நாள் பணக்காரராக ஆகி விடுவோம். நோயாளியாக கற்பனை செய்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால், ஒரு நாள் நோயாளியாகப் போவதும் உறுதி.
எனவே நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. நம் எண்ணங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லாமே உங்கள் ஆழ் மனதில் பதிந்து விடுகின்றன. நீங்கள் அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் நல்லவைகளாக, நேர்மறை எண்ணங்களாக இருந்தால் நல்ல விளைவுகளே நமக்குத் திரும்பக் கிடைக்கும். அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் தீயவைகளாக, எதிர்மறை எண்ணங்களாக இருந்தால் கெட்ட விளைவுகளே வரும்.
ஒரு விலை உயர்ந்த காரை, ஒரு சிறுவன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்த அந்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்டார். பின்னர் அவர், அச்சிறுவனை அந்த காரில் உக்காரவைத்து சிறிது தூரம் ஓட்டினார்.
பின்னர் அவரிடம் அச்சிறுவன், "உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை? எனக் கேட்டான். அவரோ, ""தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது'' என்றார்.
அந்தச் சிறுவன் சொன்ன பதில் அவரை ஆச்சரியப்பட வைத்தது. சிறுவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ""நான் அவ்வாறு நினைக்கவில்லை, உங்களுக்கு கார் பரிசளித்த உங்களின் சகோதரனைப்போல் நான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றான்.
ஆம், நம்முடைய நினைவுகள்கூட அவ்வாறே உயர்ந்தவையாக இருக்க வேண்டும். பிறருக்கு கொடுக்க வேண்டும். அதற்காக நாம் நல்வழியில் உழைக்க வேண்டும்.
படித்ததில் கவர்ந்தது!
தெ.இரவிச்சந்திரன்🙏








