முதலில் நோய் பற்றிய விழிப்புணர்வு வரணும்.
ஓகே லொக்கு லொக்கு ன்னு இருமல் வந்தால் கொரோனா ன்னு நம்ம போன் நமக்கு சொல்லிடுச்சு
அடுத்து அது வராமல் தடுக்க என்ன செய்யனும்ன்னு அரசாங்கம் சொல்லி ஆச்சு. கை கழுவுங்கள், சுத்தமாக இருங்கள், தனியாக இருங்கள், வெளியே போகாதீங்க, கூட்டம் கூடாதீர்கள் என்ற அறிவுரைகள்.
இந்த உண்மையை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அமெரிக்காவில், இத்தாலியில் என்ன நடக்கிறது என்பது நீங்கள் செய்திகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
இந்த நான்கு வாரம் கழித்து நடப்பது எதிர் கொள்ள நாம் மற்றும் நமது குடும்பம் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம் என்பது மட்டும் யோசிக்கவும்.
இந்த மார்ச் 31 ந்தேதி யில் இருந்து நடப்பது கவனித்து அதன் பிறகான நிலவரங்களுக்கான அறிவிப்பு அதன் பிறகு தான் வரும். அவங்க சொன்ன பிறகு நாம என்ன செய்வது என்று முடிவு எடுக்க நாட்கள் கிடையாது.
எறும்பு சேமிப்பு போல அந்த இக்கட்டான கால கட்டங்களை சமாளிக்க முதலில் மனதளவில் தயாராக வேண்டும். எதற்கும் துவண்டு விடக் கூடாது. அரசாங்கம் மருத்துவ மனை மட்டும் இல்லை. நோயாளிகள் அதிகம் ஆனால் தனியார் மருத்துவமனைகள் ஆட்டோமேடிக்கா உள்ளே வந்து விடும். அதனால் மருத்துவ கவனிப்பு இருக்காது என்று கவலைப்பட வேண்டாம்.
கண்டிப்பா மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் வரப் போகிறது. மற்றவர்களுக்கு இப்ப இல்லாமல் போனாலும் ஆகஸ்ட் செப்டம்பர் கால கட்டத்தில் வரும் வாய்ப்பு அதிகம். எனவே சீக்கிரம் வந்துட்டு போனால் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் திரும்ப இந்த வைரஸ் தாக்குதல் அபாயம் குறைவு. எனவே அந்த நோய் காலங்களில் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும்.
சரி இப்போது காய்ச்சல் வந்து விட்டது. இப்போது என்ன செய்யலாம்?
முதலாவது
ஒன்றும் புதிதாக செய்ய வேண்டாம். அம்மை போட்டால் நமது வீடுகளில் என்ன செய்வோமோ அதை மட்டும் செய்தால் போதும்.
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டில் தனியாக ஒரு அறையில் சுத்தமான ஆடைகளை அணிந்து இலகுவான உணவுப் பதார்த்தம் உண்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான். இந்த மாதிரி காய்ச்சல் வந்து இருக்கிறது என்று அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் சொல்லலாம். வெளியே போக முடியவில்லை என்றால் தமிழக அரசு தொடர்பு கொள்ள கொடுத்து இருந்த எண்களுக்கு வாட்ஸப் தகவல் பெயர் அட்ரஸ் கான்டாக்ட் நம்பர் அனுப்பலாம். அவர்கள் அடுத்தது உங்களை தொடர்ந்து தொடர்பு கொள்ளுவார்கள்.
இரண்டாவது
ஏழு நாட்கள் வரை இருமல், தும்மல் மூச்சுத்திணறல் இருக்கும். காய்ச்சல் சளி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
WHO கீழ் கண்ட அறிகுறிகளை தீவிர நோய்க்கான அறிகுறிகள் என்று அறிவித்து உள்ளது
1) மூச்சு விட சிரமப் படுதல்
2)உதடுகள் நீல நிறமாக மாறுதல்
3)நெஞ்சுப் பகுதியில் இறுக்கமாக உணர்தல்
4)மயக்கம் வரும் மாதிரி இருத்தல், கேட்கும் கேள்விகளுக்கு புரியாமல் மாறி மாறி பதில் அளித்தல், நீண்ட நேரம் எழுப்பியும் கண் விழிக்காமல் இருத்தல்
இந்த நான்கு அறிகுறிகள் உள்ளவர்களை தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் அட்மிஷன் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறை இருக்க வாய்ப்பு உள்ளது. முதலில் டியூப் மூலம் ஆக்ஜிசன் செலுத்தப் படும். அதில் இருந்து சரியாகவில்லை என்றால் வெண்டிலேட்டர் என்ற சுவாசக் கருவி மூலம் ஆக்சிஜன் செலுத்தப் படும்.
இவை வயதானவர்களுக்கும் குழந்தைகள் என்ற ஹை risk ஆட்கள் மட்டும் இல்லை 20-40 வயது ஆட்களுக்கும் ஆகலாம். அதனால அனைவருக்கும் இந்த தீவிர அறிகுறிகள் இருக்கிறதா என்று கூட இருக்கும் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கவும்.
நோய் இருப்பவர்களை தனியாக புழங்க வையுங்கள். அவர்கள் பயன்படுத்தும் டாய்லெட் கிருமி நாசினி போட்டு கழுவுங்கள் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் ரிமோட் டேபிள் சேர் வாசல் கதவு கைப்பிடி வாஷ் பேசின் போன்றவை தினமும் டெட்டால் இல்லை லைசால் போட்டு துடைக்கவும். பயன்படுத்தும் துணிகளை நீரில் உலர்த்தி வெயிலில் காய வையுங்கள்.
பால் உணவு மருந்து பொருட்கள் எல்லாம் அன்றாடம் கிடைக்கும். கவலை வேண்டாம். மொத்தமாக வாங்கி வைத்து வீணடிக்க வேண்டாம்.
ஏழு நாட்களில் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும். ஏழு நாட்களில் முன்னேற்றம் தெரியவில்லை என்றால் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் பரிசோதிப்பது அவசியம்
இந்தக் காய்ச்சல் வந்து மீண்டவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்பு குறைவு. அவர்கள் மற்றவர்கள் அருகே சென்று உதவி செய்யலாம். சென்னை வெள்ளம், சுனாமி, கஜா புயல் கேரளா வெள்ளம் மாதிரி 100 மடங்கு உதவிகள் தேவைப்படும் கால கட்டம் இது. மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் ஒன்றிணைவோம்.
வெளி மாநிலங்களில் இருந்து வெளி நாடுகளில் இருந்து நமக்கு யாரும் உதவிகள் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் எல்லாரும் அவர்களுடைய எல்லைகளை குறுக்கி விட்டார்கள். ஒவ்வொருவரும் பிறருடைய கைகளை எதிர் பார்க்கும் நேரம் இது. தயங்காமல் தாராளம் காட்டுங்கள்.
ஒரு மூன்று மாதங்களுக்கு இந்த மாதிரி நிலை இருக்கக் கூடும். அதன் பிறகு படிப்படியாக மாற்றம் வரும்.
அண்டை அயலார்களையும் அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்கும் நேரம். அரசாங்க அதிகாரிகளுக்கு வேண்டிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரு இடத்தில் அதிகமான அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தால் அந்த இடத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த எண்களை தங்களது மொபைலில் பதிந்து வைத்துக் கொள்ளவும்
உங்களுடைய பிரச்சனைகளை சொல்ல நீங்களே அழைக்கலாம் -
#self_declaration
#Stay_alone
#Stay_safe
#Be_Brave
#get_treatment_early
#Help_others
#stay_with_govt
#we_will_be_back
#we_are_always_with_you








