மாமர வேர் பட்டையை சிதைத்து கஷாயம் செய்து 3 வேலை சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு மற்றும் பெரும்பாடு இவற்றிற்கு தீர்வு கிட்டும். நீரிழிவு நோய் குறைய மாமரத்தின் தளிர் இலையை பொடியாக்கி கொதிக்க வைத்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.வெள்ளைப்படுதல் குறைய
அத்திப்பட்டை மாம்பட்டை நாக மரப்பட்டை ஆகியவற்றை புளிப்பு தயிரில் ஊறவைத்து இடித்து சாறு பிழிந்து அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குறையும்.மாதவிடாய் கோளாறுகள் குறையமாமரத்தின் பட்டைகளை எடுத்து அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, சிறிது கசகசா சேர்த்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறையும். பெரும்பாடு குறையபெரும்பாடு குறைய மாமரத்து வேர் பட்டையை நன்கு சிதைத்து கஷாயம் செய்து அதை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு நோய் குறையும்.தொண்டை கரகரப்பு குறைய
தினமும் மாமரத்தின் இளந்தளிர்களை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.: ஒற்றைத் தலைவலி குணமாகமாமரப் பூவை நிழலில் காயவைத்து தணலில் அதனைப் ( மாமரப் பூவைப் ) போட்டு அந்த புகையை சுவாசித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.பித்த வெடிப்பு குணமாக
பித்த வெடிப்பு குணமாக மாமரத்துப்பிசினை வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வர குணமாகும்.









