வெகு அமைதியான சு+ழலும், சொர்க்கம் போன்ற இயற்கை அழகும் நிறைந்திருக்கும் நைனித்தால், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் ஏரி மாவட்டம் என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது.
இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,481 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஸ்கந்த புராணத்தில் மும்முனிவர் தீர்த்தம் என்று நைனித்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறப்புகள் :
இங்குள்ள அற்புதமான ஏரிகளின் அழகு காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
இந்த சிகரத்தை சுற்றிலும் காணப்படும் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
அடர்ந்த பசுமையான காட்டுப் பகுதியில் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிக்கலாம்.
இங்கு 580க்கும் மேற்பட்ட வண்ணமயமான பறவைகளை காணலாம்.
ஸ்னோ வியூ எனும் மலைக்காட்சி தளத்தை கயிற்றுக்கார் மூலம் பயணம் செய்து மகிழலாம்.
இங்கிருந்து இமயமலைத்தொடர்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழலாம்.
இங்கு புகழ்பெற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஈகோ கேல் கார்டன் உள்ளது.
பொழுதை கழிக்க குதிரை சவாரி, படகு சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
இங்கு ஏராளமான நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள இடங்கள் :
🍀 நைனித்தால் ஏரி...
🍀 சுற்றுச்சு+ழல் குகைத் தோட்டம்...
🍀 துர்கா ஷா நகராட்சி நு}லகம்...
🍀 நைனி சிகரம்...
அருகிலுள்ள தலங்கள் :
🍀 ஹனுமன் கோவில்...
🍀 நைனா தேவி கோவில்...
🍀 பாஷன் தேவி கோவில்...
எப்படி செல்வது?
சாலை வழி :
டெல்லியில் இருந்து சுமார் 290 கி.மீ. தொலைவில் நைனித்தால் அமைந்துள்ளது.
தொடருந்து வழி :
கத்கோடம் தொடருந்து நிலையம் - 34 கி.மீ.
விமான வழி :
பந்த்நகர் விமான நிலையம் - 68 கி.மீ.








