வாழ்க்கையை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம்.
இளம் வயதில் அதிக உழைப்பு- குறைந்த பலன். நடுத்தரவயதில் சமமான உழைப்பு- சமமான பலன்.
வயோதிகத்தில் குறைந்த உழைப்பு அதிக பலன் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துமே சமமாகத்தான் நமக்குக் கிடைக்கின்றது.
வாழ்க்கை ஒரே இன்பமாக இருந்தால் திகட்டிவிடும். எனவே தான் சில பல
கடினமானஅனுபவங்கள்வாழ்க்கைக்கரும்பைப்போல_இனிமையானது.
நுனிக்கரும்பின் சுவையை விட அடிக்கரும்பின் சுவை அபரிமிதமானது. சுவையான, தித்திப்பான, பகுதிகளுக்கிடையே கடினமான, சுவை குறைந்த ஒரு சிறு பகுதி ( கணு ) . இதனைக்கடித்து, மென்றுத் துப்பினால் தான் சுவையான மற்றொரு பகுதியை நாம் பெற முடியும்.
துன்பங்கள் வாழ்வின் இன்பத்தை நமக்கு உணர்த்துகின்றன. தொடர்ந்து இனிப்பையே உண்பவர் நாளடைவில் இனிப்பைத்தவிர வேறு சுவை கிட்டாதா!! என்று ஏங்குபவர் போல நமது நிலை மாறிவிடக் கூடாது. எனவே தான் நமது வாழ்க்கையில்
▪இன்பம்
▪துன்பம்
▪கவலை
▪மகிழ்ச்சி
▪நஷ்டம்
▪இலாபம்
▪உறவு
▪பிரிவு,
என்று பலவகையான
சுவைகளைப் பெற்றிருக்கிறோம். ஓர் சுவையில் ஊறி மயங்கிவிடாது, எச்சுவையையும் ருசித்துப் பார்ப்போம் என்றேத் துணிவோம். நம் வாழ்க்கைக் கட்டிக் கரும்பாய், காட்டுத்தேனாய் இனிக்கட்டும்.
சுவைகளையும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
💗வாழ்க வளமுடன்








