
பொதுமக்கள் தரமற்ற தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘ஹால்மார்க்’ முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ் அங்கீகாரம் பெற்றஹால்மார்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. விற்பனையாளர்கள் தரும் நகைகள் இந்த மையங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் தரம் பதிவு செய்யப்படுகிறது.
பில் இருந்தால்தான், நகையின் தரத்தில் குறைபாடு இருக்கும்பட்சத்தில் புகார் தெரிவிப்பது எளிதாக இருக்கும்.தமிழகத்தில் மொத்தம் 1,940 தங்கம், வெள்ளி நகை விற்பனையாளர்கள் ஹால்மார்க் உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் பட்டியலை www.bis.gov.in இணையதளத் தில் Hallmarking > Jewellers Certification Scheme >> List of Licensed Jewellers என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஐஎஸ்ஐ, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந் தால் 044-22541442, 22541216 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம். sro@bis.org. in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.இவ்வாறு அவர் கூறினார்.








