நாம் அமைதியை அங்கும், இங்கும் தேடி அலைகிறோம் ஆனாலும் கிடைக்கவில்லை ஏன் என்று தெரியுமா?நாம் நாம் அங்கும், இங்கும்தேடி அலைவதால் தான் அமைதி நமக்குக் கிடைக்கவில்லை என்பதுவே உண்மை.
உங்களுக்கான அமைதி எங்கே இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் தேடும் அமைதிக்கான இரகசியம் தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக நீங்கள் ஒரு இடத்தில் பணிபுரிவாதாக இருந்தால் உங்கள் முதலாளி கோபத்தில் உங்களை பேசுவதற்கு நீங்கள் அவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் நகர்ந்து வருவீர்கள் ஆனால் உங்கள் மனைவி அல்லது உங்கள் பெற்றார் உங்களை தெரியாமல் உங்களை ஏதேனும் ஒன்றை கூறிவிட்டாலும் அதிகமான கோபத்தை அவர்கள் மீது காட்டுவீர்கள் அது ஏன்?

உங்கள் மனம், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிகள் எங்கே, யாரிடம், எப்படி சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தான் உங்களுக்கான அமைதி இருக்கும்.
அப்படி என்றால் உங்களுக்கான அமைதி உங்களுக்குள் தானே இருக்கும்? அதை வெளியே தேடி அலைவதால் எப்படிக் கிடைக்கும்?
சரி எங்களுக்கான அமைதியை நாங்கள் எப்படி உணர்வது என்று கேட்கிறீர்களா?
"அமைதியைத் தேட வேண்டாம்
அமைதியாக மாறி விடுங்கள்".
இது சிரமமான வழியாகத் தோன்றலாம் ஆனால் இது மட்டுமே உண்மையான வழி. இது மட்டுமே ஒரே ஒரு வழி.
"பயிற்சியும், முயற்சியும்
உங்களிடம் இருந்தால்
எதுவும் சாத்தியமே" .. கார்த்திக். நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். கோடான கோடி நன்றி இறைவா