கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தனித்துவமான மருந்துகள் எதுவும்
கண்டுபிடிக்கப்படாததால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை
அறிவித்துள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பெருமளவு பாதிப்பை
சந்திக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள் ரெட் அலர்ட் செய்யப்பட்டதோடு, சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீடுதோறும் சென்று, ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமாகி வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர் என சுகாதாரத் துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளா் தற்காலிகப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்திருப்பதைத் தொடா்ந்து அது தொடா்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனா் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:
தற்போது, அவசரகால நோய்த் தடுப்புப் பணியை கருத்தில் கொண்டு, அந்த இடங்கள் மூன்று மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். மேலும், பிளஸ்-2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடத்தை படித்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில், ஓராண்டு சுகாதாரப் பணியாளா் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்களுக்கு, மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற தகவலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு, எவ்வாறு அணுக வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.