நான் ஏழைதான்
இப்போது மட்டுமல்ல
முன்பும் அதற்கு முன்பும்
என்னைக் குறித்தான உங்கள் திடீர்க்கவலைகள் ஒருபுறம் மகிழ்வெனினும் மறுபுறம் பெருவியப்பே
நோய்க்காலமென விசனப்படும் நீங்கள்
பசியோடு கண்ணுறங்கா நாட்கள் பலவிலும் கண்டுங்காணாமல் சென்றவர்களே
சிலர் முகம் பொத்தியும்
பலர் முகஞ்சுளித்துமே
நகர இதே பாலத்தினடியில் பன்நெடுநாள் கிடந்திருக்கிறேன்
அவ்வபோது வருகிற அமாவசைகளும் சிலநேர்த்திக்கடன்களும் என்னை வைத்துக் கழிந்திருக்கும் சிலருக்கு
குளிப்பேனா ஒருவாய் நீர்குடிப்பேனா
என்பதெல்லாம் நாள் கணக்கீட்டின்படி நடப்பதே அரிது தான்
குப்பைகளும் காகிதங்களும் சுழன்றடிக்கும் காற்றிலும் ஓயா வாகன இரைச்சலிலுமே இரை மறந்து கிடந்திருக்கிறேன்
கூடவே இறையையும்
வயிராற உண்பதெல்லாம் அத்திப்பூத்தாற்போல எப்போதேனும் கை கூடியிருக்கும்
நீங்கள் குப்பையில் கொட்டிய பீட்சா கூட ஒருநாள் வாய்த்திருக்கிறது
ஊரடங்கு புதிது தான்
வயிரடங்கு பழகிய ஒன்று தான்
இப்போதெல்லாம்
தினசரி ஐந்தாறு பொட்டலங்களும் குடிநீர் பாட்டில்களுமாய்
என்னைச்சூழும் கூட்டத்தைக் காணுகிற போதெல்லாம் பசிப்பதே இல்லை
நீங்களெடுக்கிற போட்டோக்களின் வழி கண்கள் மட்டுமல்ல
மனசும் கூசியே கிடக்கிறேன்
எனக்கு நீங்களற்ற அந்த பழைய பாலமே போதும் பசியாறிக் கிடக்க.
சீனி.தனஞ்செழியன்