கொரோனா வைரஸ் தொற்று பரவலை
கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து 21 நாட்கள்
ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தியது. நாளைமறுநாள் (ஏப்ரல் 14-ந்தேதி) வரை
இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
அதன்பின் ஊரடங்கு
உத்தரவு தொடருமா? என்பதுதான் தற்போதைய கேள்வி. ஆனால் இந்த 21
நாட்களுக்குள் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை. மருத்துவ
வல்லூனர்கள் குழுக்கள் மற்றும் உலக சுகாதார மையம் ஊரடங்கு உத்தரவை
நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
அதேபோல் இந்தியாவில் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில்
மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் வரும் 30-ந்தேதி
வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு மத்திய அரசின்
முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது.
ஊரடங்கு
உத்தரவால் பொருாளாதரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையும்
மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. பிரதமர் பேசும்போது உயிர்
இருந்தால்தான் உலகம் இருக்கும். நாம் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்
எனக் கூறியதாக தெரிகிறது. லாக்டவுன் காரணமாக நாட்டின் வளர்ச்சி 4.8 முதல்
5.00-ல் இருந்து 1.5 முதல் 2.8-க்கு சரிந்துவிடும் என நிலை உருவாகியுள்ளது.
இந்த
சூழ்நிலை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று
பாதித்துள்ள பகுதிகளை ரெட், ஆரஞ்ச், க்ரீன் என மூன்று வகையாக பிரித்து
அதற்கேற்றபடி ஊரடங்கை நீட்டிக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
க்ரீன் மண்டலம் என்றால் கொரோனா
தொற்று இல்லாத மாவட்டங்கள். இப்படி இந்தியாவில் 400 மாவட்டங்கள் உள்ளன.
இதில் பெரும்பாலான துறைகளுக்கு அனுமதி வழங்குதல்.

ஆரஞ்ச்
மண்டலம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக உள்ள
மாவட்டங்கள் இங்கு இதற்கு மேல் பரவாது என்று கருதப்படுகிறது. இந்தப்
பகுதியில் குறிப்பிட்ட அளவிலான பொதுமக்களுக்கான போக்குவரத்து,
அறுவடைகளுக்கு அனுமதி வழங்குதல்.
15 பேருக்கு
மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரெட் மண்டலமாக கருப்படுகிறது. இந்த
இடங்களில் எந்தவிதமான செயலுக்கும் அனுமதி கிடையாது. இந்த வகையில் ஊரடங்கை
நீட்டிக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
நேற்றைய
ஆலோசனையின்போது ‘‘உள்கட்டமைப்பு துறையில் ஏராளமான புலம்பெயர்ந்த ஊழியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவற்றிற்கு அனுமதி வழங்கலாம். அதேபோல்
தற்போது அறுவடை நேரம் என்பதால் விவசாயத்துறையிலும் ஊரடங்கை தளர்த்தலாம்’’
என பிரதமர் சுட்டிக்காட்டியது தெரிகிறது.
மத்திய
உள்துறை அமைச்சமும் இதே கருத்தை வலியுறுத்தியதாக தெரிகிறது. உணவு
பதப்படுத்துதல், விமான போக்குவரத்து, மருந்துகள், தொழிற்சாலைகள்,
கட்டுமானம் ஆகிய துறைகளும் அடங்கும். ஆனால், விலகி இருப்பதை கடைபிடிப்பது
தொடரம் என மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.