பிரேசிலியா:
உலகம்
முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982
பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டிலும்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44
பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை
324 பேர் பலியாகியுள்ளனர்.
உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள்
பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான
பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத்தொடங்கியுள்ளது.
அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.
அப்பெண்
சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார். அமேசானில் வாழும்
பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது
காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.
இதற்கிடையே
வைரஸ் உறுதி செய்யப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அமேசானில் கொரோனா வைரஸ் பரவியது இதுவே
முதல் முறையாகும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...