கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் இடையே இருந்த கையிருப்பு கரைந்து பணப் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் உடனடி கடன் தேவையை குறைந்த வட்டியில் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு நாள் சிறப்பு நகை கடன் எனும் புதிய திட்டத்தை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது
கடன் திட்டத்தின் முக்கிய நோக்கம் குறைந்த வட்டியில் பொதுமக்களுக்கு கடன் வழங்கி அதன் வாயிலாக அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதே ஆகும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றிற்கான நகை மதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள நகைக் கடன் திட்டத்தை விட 10 சதவீத அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.








