( நம் கால் விரல்களைத் தன்னிச்சையாகத் தனித்தனியாக அசைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ) முன் இணை உறுப்புகளைக் கைகளாகப் பயன்படுத்த பயன்படுத்த மனிதன் கருவிகளைப் பயன்படுத்தும் விலங்காக ( Tool using animal ) உருவானான்.
பின்னர் மற்ற விலங்கிலிருந்து வேறுபட்டு நின்றதோடு , பல்வேறு கட்ட வளர்ச்சியோடு மனிதனாகப் பரிணமித்து இருக்கிறான். இன்று மனிதன் , விரல் நுனியில் மண்ணையும் விண்ணையும் தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்து இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட முடிகிறது.









