நம் கை, கால்களிலுள்ள விரல்கள் எல்லாம் ஒரே அளவாக இல்லாமல் வெவ்வேறு அளவில்
அமைந்துள்ள காரணத்தால்தான் நாம் பல வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது. கால்
விரல்களை விடக் கைவிரல்களின் அளவு அதிகம் வேறுபட்டு இருப்பதும்
தன்னிச்சையாக ஒவ்வொன்றும் அசைவதும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
தொடர்ச்சியாக நடைபெற்ற மனித பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கியமான ஒரு
மாற்றமாகும்.
( நம் கால் விரல்களைத் தன்னிச்சையாகத் தனித்தனியாக அசைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ) முன் இணை உறுப்புகளைக் கைகளாகப் பயன்படுத்த பயன்படுத்த மனிதன் கருவிகளைப் பயன்படுத்தும் விலங்காக ( Tool using animal ) உருவானான்.
பின்னர் மற்ற விலங்கிலிருந்து வேறுபட்டு நின்றதோடு , பல்வேறு கட்ட வளர்ச்சியோடு மனிதனாகப் பரிணமித்து இருக்கிறான். இன்று மனிதன் , விரல் நுனியில் மண்ணையும் விண்ணையும் தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்து இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட முடிகிறது.