நீ இன்ஜினியரிங் தானே படிச்சே...!?
என்ன... இப்படி கேட்டுட்ட...!?
கேக்குறேன்ல சொல்லு...
நீ இன்ஜினியரிங் தானே படிச்ச...!?
ஆமா...
இப்ப அதுக்கென்ன...!?
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு...
வட்டத்தின் சுற்றளவுக்கு என்ன பாஃர்முலா தெரியுமா...?
சர்க்கம்ப்ஃரன்ஸ் தானே...!?
ஆமா...!?
Circumference of a Circle
C = 2 × π × r.
சரி... அதே சர்க்கிளுக்கு பரப்பளவுக்கு என்ன பாஃர்முலா...!?
சர்க்கிள் ஏரியாவுக்குத்தானே...?
A = π × r2
பாஃர்முலால்லாம் கரெக்டாத்தான் சொல்ற...?
பின்ன...
காலேஜ் ப்ராஜக்ட்ல
ஒரு வட்ட வடிவ லைட்ஹவுசுக்கு
எத்தன மூட்டை சிமெண்ட் எத்தன லோட் ஜல்லி வேணும்னு துல்லியமா கால்குலேட் பண்ணி சொல்லி ப்ராஜக்ட்ல சென்ட்டம் வாங்கினவனாக்கும்....
அதையெல்லாம் கரெக்ட்டா பண்ணிட்டு இத மட்டும் ஏன் சொதப்புன...?
எத...?
15 செ.மீ. விட்டமும்
15 செ.மீ உயரமும் உள்ள
அந்த ஒரு பாத்திரத்த வெளக்க
பாதி பாக்கெட் சபீனா பவுடரை காலி பண்ணிருக்கியே...
நீ இன்ஜினியருக்குத்தான படிச்ச...?








