ஜூன் இறுதியில் நடத்துவதற்காக இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு பணிகள் தொடங்கிவிட்டன.
வழக்கமான திட்டத்தோடு ஜூன் இறுதியில் கலந்தாய்வுகளை நடத்த, பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளை மாநிலம் முழுவதும் நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பொறியியல் சேர்க்கைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
2 லட்சம் விண்ணப்பங்களைக் கையாளும் மென்பொருளோடு 500 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. இதற்கு முன்பு கலந்தாய்வுகளை மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் அப்பணிகளைக் கையாள மறுத்ததால், 2019 முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வுகளை நடத்துகிறது. கடந்த ஆண்டைப் போலவே தரமணியில் உள்ள மத்திய பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.








