அவரது பேட்டி:தமிழகத்தில், 50 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. 15 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். மறைமுகமாக, 45 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது.கொரோனா ஊரடங்கால், ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும், மீண்டும் புத்துயிர் பெற ஓராண்டாகும். ஓட்டல் தொழிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, ஊரடங்கு காலத்திற்கான கட்டட வாடகையை, முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.இன்னும், ஆறு மாதங்களுக்கு, 50 சதவீதம் வாடகை வசூலிக்க, அரசு உத்தரவிட வேண்டும்.
உணவின் மீதான, 5 சதவீதம், கட்டடவாடகை மீதான, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களின் சம்பளத்தில், 50 சதவீதம் மானிய மாக வழங்க வேண்டும்.இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்களுக்கான பங்களிப்பு தொகையை, ஆறு மாதங்களுக்கு நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.









