தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அரசு ஆலோசனைகூட செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன்
கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு
பொதுத்தேர்வு மையங்கள் அனைத்திலும் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர்
பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும்
எடுக்கவில்லை.
இதுகுறித்து ஆலோசனை கூட செய்யவில்லை.
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். ஆன்லைனில் கட்டணம்
வசூலிக்கக்கூடாது என்றுதான் கூறி உள்ளேன். கொரோனா வைரஸ் உள்ள நிலையில்
ஆன்லைனில்தான் பாடம் நடத்த முடியும். சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ளதாலும், தனியார் நடத்துவதாலும் அவர்கள் முடிவெடுத்து
உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக மூன்று மடங்கு தேர்வு மையங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்து
ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...