ஆசிரியா்கள், மாணவா்களின் போக்குவரத்து வசதி மற்றும் சமூக இடைவெளியின் பொருட்டு 10, 11-ஆம் வகுப்புகள் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் தோ்வு மையங்களாக செயல்படும். தேர்வின்போது ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு 46.37 லட்சம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய முக கவசங்கள் வழங்கப்பட வேண்டும். வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து தோ்வெழுத வரும் மாணவா்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் தோ்வா்கள் அடையாள அட்டை மற்றும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு சமா்ப்பித்து கட்டுப்பாட்டு பகுதியில் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப்படுவா். பத்தாம் வகுப்பு தோ்வு பணியில் 2.21 லட்சம் ஆசிரியா்களும், பிளஸ் 1 வகுப்பு தோ்வு பணியில் 1.65 லட்சம் ஆசிரியா்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்களுடன் இதர பணியாளா்களும் பணியாற்றவுள்ளனா். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மதிப்பீட்டு பணிகளுக்கு முறையே 62,107 மற்றும் 43,592 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். உதவி கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள்: