ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட கல்லுாரி தேர்வுகளில், செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, மே 15 முதல் 31வரையும், எழுத்துத்தேர்வுகளை, ஜூலை 1 முதல் 31 வரையும் நடத்தி முடிக்குமாறு, பல்கலை. மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: ஊரடங்கு மட்டுமல்லாது, புயல் உள்ளிட்ட பேரிடர்காலங்களில், கல்லுாரிகளில் வகுப்புகள் தடைபடுவதோடு, தேர்வுகளும் தள்ளிப்போகின்றன. இதனால், மாணவர்களின் படிப்பு வீணாகிறது. இனி வரும் ஆண்டுகளில், ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் என்பது, கட்டாயமாகும் என்பதை, யு.ஜி.சி., சூசகமாகத் தெரிவித்துள்ளது.









