இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 697ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், சுமார் 14 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பு, உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதுபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனாவின் பிடியில் சிக்கி, நாடு முழுவதும் 33 ஆயிரத்து 514 பேர், சிகிச்சை பெற்று வர, இதுவரை 14 ஆயிரத்து 182 பேர், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிராவில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 500 ஐ தாண்டி, உயிரிழப்பு 617 ஆக கூடியுள்ளது.
குஜராத்தில் கொரோனாபாதிப்பு 6 ஆயிரத்தையும், டெல்லியில் 5 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்ட, உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஐ நெருங்கி
உள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 717 ஆக உயர, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ நெருங்கி விட்டது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ நெருங்கியது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 454 ஆக உயர்ந்தது.
வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.