கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுட்டப்படுகிறது.
* மாணாக்கரின் விடைத்தாளில் தேர்வு முடிந்த பின்னர் இடப்படும் அரசுத் தேர்வுகள் முத்திரையை அறைகளின் எண்ணிக்கைக்கு எற்ப தேர்வு மையங்களில் இருந்து மாதிரி முத்திரையை பெற்று 12.06.2020 -க்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* பள்ளிகளில் பயிலும் அனைத்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணாக்கர்களுக்கும் தேர்வு நுழைவு சீட்டினை வழங்கும் போது ( 08.06.2020 முதல் ) நழைவு சீட்டுடன் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முகக்கவசங்கள் ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் வழங்க வேண்டும். 3 - வது முகக்கசம் 19.06.2020 அன்று வழங்கவும் தெரிவிக்கப்படுகிறது.









