இதனால், உள்நாட்டிலும், ஆபரண தங்கம் விலை, எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், சனிகிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,608 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 864 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில், உச்ச விலையாக இருந்தது.
கிராம் வெள்ளி, 53.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்று கிழமை, தங்க சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, இரண்டு ரூபாய் உயர்ந்து, 4,610 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 16 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 880 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 80 காசுகள் உயர்ந்து, 54.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.









