திருமணம் நிச்சயம்இவருக்கு, துாத்துக்குடியில் பெண் பார்த்து, நிச்சயம் செய்தனர்.பெண்ணை பார்க்க கிளம்பிய நேரத்தில், கொரோனா ஊரடங்கு தடையாக வந்தது. இ - பாஸ் பெற விண்ணப்பித்து, துாத்துக்குடி மாவட்ட அதிகாரிகளால், இரு முறை நிராகரிக்கப்பட்டது.வாலிபரை, அவரது நண்பர்கள், ஈரோடு மாவட்டம், குரும்பநாயக்கன் பாளையத்தில், ஒரு பிரவுசிங் சென்டருக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் உரிமையாளர், பழைய திருமண அழைப்பிதழ் ஒன்றை ஸ்கேன் செய்து, மாப்பிள்ளை, பெண் பெயர் விபரங்களில், டிரைவர், அவருக்கு நிச்சயித்த பெண் பெயர்களை நிரப்பி, போலி திருமண அழைப்பிதழ் தயாரித்தார்.அதை, இ - பாஸ் ஆவணமாக இணைத்து, மூன்றாவது முறையாக, 11ம் தேதி விண்ணப்பித்தார். அதிகாரிகள், துாத்துக்குடி மண்டபத்தை தொடர்பு கொண்ட போது, குறித்த நாளில் எந்த திருமணமும் நடக்கவில்லை என தெரிந்தது.
விசாரணை
இதனால்,
துாத்துக்குடி அதிகாரிகள், வேன் டிரைவருக்கு போன் செய்து, 'போலி திருமண அழைப்பிதழ் கொடுத்து, இ - பாஸ் பெற முயன்றது தவறு' எனக் கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விசாரணைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக, இ - பாஸ் பிரிவினர் கூறியதாவது:வேன் டிரைவரிடம் விசாரித்தபோது, பிரவுசிங் சென்டரில் கொடுத்த யோசனைப்படி விண்ணப்பித்ததாகவும், ஏமாற்றும் நோக்கத்தில் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். அவரை அனுப்பி விட்டோம். ஆயினும், தவறான ஆவணம் கொடுத்து, இ - பாஸ் பெற முயன்றதாக, வேன் டிரைவர் மீது, துாத்துக்குடி அதிகாரிகள் புகார் அளிக்க உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








