பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்பிடிப்பு, தொழிற்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் பெற முடியும். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கல்வி பயில கடன் பெற முடியும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் வரையிலும் வெளிநாடுகளில் கல்வி பயில 20 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள் கேட்கும் முறையான ஆவணங்களை வழங்கினால் கல்வி கடன் எளிதா கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக ஆவணங்களை கேட்கின்றன.
தேவையான ஆவணங்கள்
பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்களை பார்ப்போம்.
அரசு அதிகாரிகள் சான்று பெற்ற(அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ், மாணவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரின் புகைப்படம்.
👉🏼 ஜாமீன் கையெழுத்து
மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமான சான்றிதழ், கல்வி கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்பு சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கல்வி கடன் வாங்குவதற்கு ஜாமீன் கையெழுத்து போடும் பெற்றோர் அல்லது மற்றவர்களின் ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை (பேங்க் ஸ்டேட்மெண்ட்), வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்திருந்தால் விசா, விமான கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.
👉🏼 எஸ்பிஐ தரும் சலுகை
வங்கிகளில் நீங்கள் 4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக கடன் பெற விரும்பினால் குறைந்த பட்ச வட்டி விதிகத்தில் வழங்கப்படும். ஆனால் 4லட்சத்திற்கு மேல் கடன் வாங்க விரும்பினால் குறைந்தபட்ச வட்டியுடன், குறிப்பிட்ட சதவீதம் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும். வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணமாக எஸ்பிஐ வங்கி 9.30 சதவீதம் வட்டி ஆண்டுக்கு வசூலிக்கிறது. மாணவிகளுக்கு என்றால் 50 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும். எந்த வங்கியிலும் மாணவர்கள் 4 லட்சம் வரை கடன் பெற ஜாமீன் தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் கடன் வாங்குவதாக இருந்தால் சொத்தை ஜாமீனாக வைக்க வேண்டும்.
👉🏼 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகள்
இந்த கடனை மாணவர்கள் படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள் படிக்கும் காலத்தில் வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. எனவே கடன் வாங்கும் வங்கிகளை பொறுத்து வட்டி செலுத்த வேண்டுமா இல்லை என்பது தெரியவரும். பட்டப்படிப்பை படித்து முடித்த ஒரு வருடத்திற்கு பின்னர் கடனை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டுகளுககுள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். படிக்கும் காலத்தில் அரியர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வந்தால், ஒவ்வொரு பருவத்திலும் கல்வி கடன் வாங்குவது மட்டுமல்ல, பின்னாளில் செலுத்துவதும் எளிதாக இருக்கும்.









