பெரியகுளம் : தேனிமாவட்டம் பெரியகுளம் 10ம் வகுப்பு மாணவர் முத்தையா 14
தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' படித்ததால் திறனறி தேர்வில் வெற்றி
பெற்றார். அதில் கிடைத்த உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து பட்டம் 180
இதழ்களுக்கு ரூ.540 செலுத்தி சந்தாதாரர் ஆனார்.
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பி.முத்தையா. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர். மூன்றாம் வகுப்பு முதல் தினமலர் சிறுவர்மலர் வாசகரானார். 'பட்டம்' இதழை சில ஆண்டுகளாக படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டார். 2019ல் மத்திய அரசு நடத்திய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றார். இதற்காக கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும். முதலாம் ஆண்டு உதவித்தொகை கிடைத்துள்ளது. அதிலிருந்து இன்று துவங்கி வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வீடுதேடிவரும் 'பட்டம்' இதழுக்கான சந்தா ரூ.540ஐ செலுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவர் 180 பட்டம் இதழ்களை பெறுவார்.முத்தையா கூறியதாவது: என்
குடும்பம் ஏழ்மையானது. படிப்பதால் மட்டுமே உயர முடியும் என்று நம்பிக்கை
கொண்டுள்ளேன். தினமலர் 'பட்டம்' இதழில் செய்தி ஜாம், வெங்கியை கேளுங்க,
இயற்கை நம் நண்பன், வழிநடத்தும் வார்த்தை, படக்கதை பயன்கதை ,இன்தமிழ்
என்தமிழ், கணிதக் கற்கண்டு, நீங்களும் நாங்களும், மாணவர் குரல், நான்கு
திசை உட்பட 12 பக்கங்களையும் படித்தேன். பொதுஅறிவை வளர்த்துக்கொண்டேன்.
இதனால் திறனறி தேர்வில் வெற்றி பெற்றேன். அதில் கிடைத்த பணத்தில் 'பட்டம்'
சந்தாதாரராகி உள்ளேன். தொடர்ந்து 'பட்டம்' மற்றும் பொதுஅறிவு புத்தகங்கள்
படித்து ஐ.ஏ.எஸ். ஆவதே என் லட்சியம் என்றார்.பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பி.முத்தையா. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர். மூன்றாம் வகுப்பு முதல் தினமலர் சிறுவர்மலர் வாசகரானார். 'பட்டம்' இதழை சில ஆண்டுகளாக படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டார். 2019ல் மத்திய அரசு நடத்திய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றார். இதற்காக கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும். முதலாம் ஆண்டு உதவித்தொகை கிடைத்துள்ளது. அதிலிருந்து இன்று துவங்கி வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வீடுதேடிவரும் 'பட்டம்' இதழுக்கான சந்தா ரூ.540ஐ செலுத்தியுள்ளார்.