உடற்பயிற்சி கூடம்
சென்னை:
கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற்பயிற்சிக்
கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க, மத்திய உள்துறை
அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், உடற்பயிற்சி கூடங்கள் பின்பற்ற
வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
50 வயது மற்றும் அதற்குக்குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.
ஜிம்கள் இயங்குவதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக
வெளியிடப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை ஜிம்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.







