நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...
மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு உகந்தநாள் உங்கள் கல்வித் திறன் பளிச்சிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவர் புதிய வாய்ப்பைப் பெறுவார்கள்கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சுப பலன்களை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற சூழல் உருவாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வேலையாட்களால் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும் என்றாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பேச்சுவார்த்தைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.உடல் நலன் சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். சட்டென உணர்ச்சிவசப்படக்கூடிய நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை.
புதிய தொழில் முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை அதிகமாக பெறுவார்கள். இருப்பினும், திறம்பட சமாளித்து வெற்றியடைவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய கூடிய நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான நல்ல நாள் ஆகும். உங்கள் வார்த்தைக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். தனவரவு கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.
பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இவைகளில் ஆதாயம் உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி கொண்டு இருந்தால் அவைகளில் வெற்றி உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வருவது சற்றுக் இழுபறியாகத்தான் இருக்கும். உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களுக்கு யோகத்தை தரக்கூடிய நாள் ஆகும். பலருக்கு பிரயாணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பயணத்தால் வெற்றி கிடைக்கும்.வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்,
சோசியல் மீடியா போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. நேரத்தில் கவனத்தை செலுத்தவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றத்தை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களுக்கு தனவரவு உடன் கூடிய மகிழ்ச்சியான நாள் ஆகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.மாணவர்களுக்கு கல்வி மேம்படும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு கால் வலி ஏற்பட்டு நீங்கும் பற்றாக்குறை சிறிதளவு இருக்கும் என்றாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். உணவு தொழில் சுற்றுலாத்துறை வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஆன நிலையை அடைவார்கள். சமுதாயத்திலும், குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும்.
மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாள் ஆகும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆயினும் வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக சிந்தனைகளோடு செல்லும் அருமையான நாள் ஆகும். மகான்களின் தரிசனம், கோவிலுக்குச் செல்லுதல், குருமார்களின் ஆசீர்வாதம் போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவற்றில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. யோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
நம்பிக்கையைப் பெற்று இருப்பீர்கள். சற்று பொறுமையாக இருந்தால் உயர்வு பெறலாம். சொந்த தொழில் செய்பவர்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இருப்பினும், திறம்பட சமாளிப்பீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி பெற்றோருடன் பேச சாதகமான பதில் கிடைக்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பதற்கிணங்க உங்களுடைய பேச்சு கவனம் தேவை.மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது கூட்டுத் தொழில் துவங்குவது போன்றவற்றை சற்று தள்ளி வைக்கலாம். இவைகளால், ஆதாயம் உண்டாகும். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் ஈடேறும்.கல்வி நன்றாக இருக்கும். கல்வியின் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும். உடல் நலம் சீராக இருந்துவரும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.









