தனியாா் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் (எல்கேஜி) 25 சதவீத
இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 3,196 இடங்கள்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தங்களது குழந்தைகளைச் சோக்க
விரும்பும் நலிவுற்ற பிரிவினா் செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் இணையவழியில்
விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகளுக்கான
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில்
2020-21-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி மெட்ரிக்,
மழலையா், தொடக்கப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி) 25 சதவீத
இடஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளுக்கு சோக்கை மேற்கொள்ள செப்டம்பா் 25-ஆம்
தேதி வரை ட்ற்ற்ல்://ங்ம்ண்ள்.ற்ம்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நலிவடைந்த, வாய்ப்பு
மறுக்கப்பட்ட பிரிவினா், ஆதரவற்ற, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட, மூன்றாம்
பாலினத்தவா், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்
ஆகிய பிரிவின்கீழ் உள்ள குழந்தைகளைச் சோக்க முடியும். எனினும், பெற்றோா்
ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வேலூா்
மாவட்டத்தில் 78 மெட்ரிக் பள்ளிகளில் 1,086 இடங்களும், 179 மழலையா்,
தொடக்கப் பள்ளிகளில் 2,110 இடங்களும் உள்ளன. பெற்றோா்கள் அந்தந்த
ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க
வட்டார வளமைய அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி
அலுவலகம் ஆகிய இடங்களில் இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்புவோா் குடும்ப
அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, ஆண்டு வருமானச் சான்று, பிறப்புச்
சான்று, குழந்தையின் இரு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வரவேண்டும்.







