தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
*தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது
*சென்னையில் இன்று 1286 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14,807 பேருக்கு இதுவரை சென்னையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
*கடந்த
24 மணி நேரத்தில் 5870 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,930 ஆக
உயர்ந்துள்ளது
*தமிழகத்தில்
தினசரி நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துவரும் நிலையில், இன்றும் 109 பேர்
உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது.







