அரசு கல்லூரிகளில் பணியாற்றும்எம்.எட்., தகுதி பேராசிரியர்களை பி.எட்., கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசு கல்லூரிகளில் பணியாற்றும்எம்.எட்., தகுதி பேராசிரியர்களை பி.எட்., கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம்:

th%252811%2529

தமிழகத்தில் அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் எம்.எட்., தகுதி பெற்ற உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்துள்ளது. 

இவர்களை அரசு கல்வியியல் (பி.எட்.,) கல்லுாரிகளுக்கு மாற்றம் செய்ய கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.மாநில அளவில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. சில பல்கலை உறுப்புக் கல்லுாரிகளும் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு எம்.எட்., மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஎச்.டி., முடித்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் தொடர்பான விவரங்களை கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்கள் சேகரித்து இயக்குநர் பூரணச்சந்திரனுக்கு அனுப்பியுள்ளனர். அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கு இவர்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முடிவால் கலைக் கல்லுாரி சீனியர் பேராசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


அரசு கலைக் கல்லுாரிகளில் 2012க்கு பின் நியமனம் இல்லை. எம்.எட்., தகுதியுள்ளோர் தற்போது 'கல்லுாரி முதல்வர்' பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர்.இவர்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டால் ஜூனியர் நிலையில் அங்கு பணியை தொடர வேண்டும். மேலும் சென்னை, புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் தான் பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இதனால் பணியிட மாற்றம் என்பது பெரும் சுமையாக இருக்கும். எனவே விருப்பம் உள்ளோரை மட்டும் மாற்றம் செய்ய வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H