சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வியெழுப்பியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின்
படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும்,
மாணவர்களின் எதிர்காலம் கருதி இணையத்தளம் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு
வருகிறது. மேலும், அரசு சார்பாக...







